ஆக்சிஜன் எங்கே?

இப்படியும் ஒரு காலம் வந்தது. மரங்கள் அழிந்தன .முற்றிலும் அல்ல முக்கால் பங்கு இருக்கும்.மனிதன் என்ற மூடர்களினால். அப்போது தன்ணீர் தாரளமாக இருந்தது .
மழையை துரத்திவிட்டு சூரியன் கொழுத்திகொண்டு நின்று ஐஸ்கட்டிகளை தண்ணியாய் மாற்றிக்கொண்டிருந்தது .

பற்றாக்குறை. ஒரு மிகப் பெரிய பற்றாகுறை. ஆக்சிஜன் குறைவு. வியப்பு. வியப்பாகத்தான் இருக்கிறது. மரங்கள் இல்லை. ஆக்சிஜன் குறைவு. மனிதர்களுக்குள் போர் மூண்டு , தண்ணீர் சண்டை வந்து, உணவிலும் வந்து இப்போது ஆக்சிஜனில் வந்து நிற்கிறது. முடிவாக கூட இருக்கலாம். மனிதன் என்ற மூடன். உணவில்லை , உடையில்லை , வீடு இல்லை எல்லாம் எல்லாம் மற்றவனிடம் பிடுங்கிகொள்கிறான் அவனை அடித்து விட்டு.

செயற்கை ஆக்சிஜன் எடுத்து கொள்ளலாம் . எவ்வளவு நாளைக்கு?.. ஆக்சிஜன் என்ன வாத்தா கோழியா துரத்தி துரத்தி பிடிப்பதற்கு . மூச்சு திணறி இறக்கிறார்கள். ஏன் இறந்துக்கொண்டிருக்கிறார்கள். புரியவில்லை. ஆக்சிஜன் கிடைக்க என்ன செய்யலாம்.இதற்கு அதே உத்திதான். ஆக்சிஜன் போர் . மரங்களை அழித்தவ்ன் மூடன்தான்(மனிதன்). அவனுள் ஒன்று தோன்றியது. சுற்றுப்புறத்தில்
ஆக்சிஜன் இருப்பதால் எல்லாரும் சுவாசித்து அவர் அவர்களுக்கு குறைவாக கிடைது இறக்கின்றார்கள். அவர்களை கொன்றுவிட்டால் தமக்கே முழு ஆக்சிஜன் கிடைத்துவிடும் என்ற யோசனை வந்தது. அந்த யோசனை ஊர் முழுவதும் பரவ ஆரம்பித்தது .பிறகென்ன ஒருவனை ஒருவன் வெட்டிகொண்டான். இப்போது ஆக்சிஜன் இங்கே மனிதன் எங்கே??.

-U.S.Aurrobindhan

Submitted on: Mon Jul 23 2012 06:55:09 GMT-0700 (PDT)
Category: Original
Language: Tamil
Copyright: A Billion Stories (http://www.abillionstories.com)

Submit your own work at http://www.abillionstories.com

Read submissions at http://abilionstories.wordpress.com
Submit a poem, quote, proverb, story, mantra, folklore in your own language at http://www.abillionstories.com/submit